அணு சக்தியால் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் தீ: 7 பேர் காயம்

அமெரிக்காவின் வட கிழக்கு மைனீ மாகாணத்தில் உள்ள போர்ட்ஸ்மெளத் கடற்படைத் தளத்தில் இந்த USS Miami SSN 755 என்ற நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை மாலை 6 மணியளவில் இதில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், இந்தத் தகவல் இப்போது தான் வெளியே தெரியவந்துள்ளது.
தீயை அணைக்க நடந்த முயற்சியில் 4 வீரர்கள், 3 தீயணைப்புப் படையினர் காயமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஏவுக்ணைகளை வைக்கும் பகுதி, வீரர்கள் தங்கும் பகுதி தான் சேதமடைந்துள்ளதாகவும், அணு சக்தி உலைக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க கடற்படைத் தெரிவித்துள்ளது.
அமெரிக்க கடற்படையின் 6வது பிரிவைச் சேர்ந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் வழக்கமாக இத்தாலியை மையமாகக் கொண்டு ஐரோப்பிய- ஆப்பிரிக்க கடல் பகுதிகளை கண்காணித்து வரும் ஒன்றாகும். சமீபத்தில் தனது 6 மாத கால பணியை முடித்துக் கொண்டு இந்தக் கப்பல் பராமரிப்புப் பணிகளுக்காக மைனீ கடற்படைத் தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications