பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர் - திருப்பதியில் கூட்ட நெரிசல் - 10 பேர் காயம்

Subscribe to Oneindia Tamil

Tirupathi Temple
திருமலை: பல லட்சம் பக்தர்கள் ஒரே நாளில் குவிந்ததால் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 10 பேர் காயமடைந்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

திருப்பதி வெங்காடசலபதி கோவிலில் வார விடுமுறை நாட்கள், முக்கிய தினங்களில் கூட்டம் பெருமளவில் கூடும். ஆனால் இதுவரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் பெரிய அளவில் ஏற்பட்டதில்லை. கூட்ட நெரிசலை திறம்பட சமாளிப்பதில் கை தேர்ந்தவர்கள் திருமலை தேவஸ்தான ஊழியர்கள்.

இந்த நிலையில் இன்று சனிக்கிழமை என்பதாலும், விடுமுறை தினம் என்பதாலும், திருப்பதியில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். மேலும் இன்று சஹஸ்ர கலசாபிஷேகம் வேறு நடைபெறுவதால் ஒரே நாளில் பல லட்சம் பேர் குவிந்தனர். இதனால் திருப்பதி கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி 10 பக்தர்கள் காயமடைந்தனர்.

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+