மதுரை ஆதீன மடத்தில் பெண்கள் தொடர்பான நோய்களுக்கான சிகிச்சை முகாம்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை ஆதீன மடத்தில் இன்று பெண்கள், குழந்தைகளுக்கான நோய்கள் உள்ளிட்டவற்றுக்கான இலவச சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.

எலும்பு, காது, மூக்கு, தொண்டை, பல், குழந்தை- பெண்களுக்கான தொடர்பான நோய்கள், ஸ்கேன் எடுத்தல், ரத்த அழுத்தம் உள்பட அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்ட்டது.

நிகழ்ச்சியில் நித்தியானந்தா கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசியதாவது:

இந்த சிறப்பு மருத்துவ முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் 10 ஆயிரம் பேருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. சேலத்தை சேர்ந்த டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் இந்த மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

இந்த இலவச பொது மருத்துவ முகாம் ஒவ்வொரு 15 நாட்கள் கழித்து நடத்தப்படும். மருத்துவமனை கட்டும் வரை மதுரை ஆதீன மடத்தில் இந்த முகாம் நடைபெறும். நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சை (ரத்த சுத்திரிகரிப்பு) அளிக்க 47 மிஷின்களை அமெரிக்காவில் இருந்து 2 பக்தர்கள் மதுரை ஆதீன மடத்திற்கு வாங்கி தந்துள்ளார்கள்.

ஒரு மிஷினின் விலை ரூ.6 லட்சம் ஆகும். ஒரு மிஷின் மூலம் தினமும் 6 பேருக்கு சிகிச்சை அளிக்க முடியும். மடத்தில் அன்னதானம் வழங்கப்படுவதால் டயாலிசிஸ் சென்டர் வேறு இடத்திற்கு மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மதுரை மேலகோபுர வாசலில் மதுரை ஆதீன மடத்துக்கு சொந்தமான இடத்தில் வாடைகைக்கு உள்ள காபி தூள் விற்பனை மையத்தை காலி செய்யுமாறு கூறினோம். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்து விட்டார்கள். இது தொடர்பாக சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து அங்கு டயாலிசிஸ் சென்டர் அமைக்கப்படும்.

இங்கு அமைக்கப்படும் டயாலிசிஸ் சென்டர் 24 மணிநேரமும் இயங்கும். 140 பேர் மதுரை ஆதீன மடத்தின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சொத்துக்கள் மீட்கப்படும். இந்த மருத்துவ முகாமை சிலர் தடுக்க முயற்சித்தார்கள். இது நல்லதல்ல.

ஞானபீடம் சார்பில் ஏற்கனவே மருத்துவமுகாம், கல்வி உதவி போன்ற பல்வேறு சமூக சேவைகள் செய்து கொண்டு வருகிறோம். அதன்தொடர்ச்சியாக விரைவில் சுயஉதவிக் குழுக்களுக்கு வட்டியில்லா கடன் கொடுக்க உள்ளோம். உலகம் முழுவதும் எனக்கு 1 கோடி சீடர்கள் உள்ளனர். நான் கரைப்படுத்தப்பட்டோனே ஒழிய கரைபடவில்லை.

சென்னை கோர்ட்டில் உள்ள வழக்குகளை சட்டப்படி சந்திப்பேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. தமிழக முதல்வரை சந்திக்க மனு அனுப்பி உள்ளேன். அனுமதி கிடைத்தவுடன் முதல்வரை சந்திப்பேன்.

டெங்கு காய்ச்சல் தடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என டாக்டர்களிடம் விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால் அதற்கெனவும் முகாம் நடத்தப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+