புதுக்கோட்டையில் 25 வேட்பு மனுக்கள் ஏற்பு- 9 மனுக்கள் நிராகரிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படடன. இதில் 25 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
அதிமுக, தேமுதிக கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 31 வேட்பாளர்கள் சார்பில் 34 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
ஜூன் 12ம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டைமானும், தேமுதிக சார்பில் ஜாகிர் உசேனும் மனு செய்திருந்தனர்.
கடைசி நாளான நேற்று ஜாகிர் உசேன் 2வது முறையாக மனு செய்தார். அவர் உள்பட மொத்தம் 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தாக்கலாகியிருந்த 34 வேட்பு மனுக்களும் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளபப்ட்டன. இதில் அதிமுக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் உள்பட 25 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் மூவரின் மனுக்கள் உள்பட 9 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து 28ம் தேதிக்குள் மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஜூன் 12ம் தேதி தேர்தல் நடைபெறும். 15ம் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
இந்தத் தேர்தலை திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, பாஜக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications