மீன்பிடி தடைக்காலம் நாளை முடிகிறது: மீனவர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் 13,000க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 லட்சம் பேர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
கடல் வளம் காக்கவும், மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே மாதம் 29ம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். தடைக்காலத்தில் படகுகளுக்கு வர்ணம் பூசுதல், என்ஜின் பழுது நீக்குதல், சேதமடைந்த பலகைகளை அகற்றுதல், புரொப்பலர்(இழை) பொருத்துதல், புதிய அலுமினிய தகடுகள் பொருத்துதல் உள்ளிட்ட மராமத்து பணிகளை படகு உரிமையாளர்கள் செய்வர்.
இந்த ஆண்டும் ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை விசைப்படகுகள் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டது. அந்த தடைக்காலம் நாளையும் முடிகிறது. கடந்த சில வாரங்களாக நிலவிய தட்பவெட்ப நிலைகளால் மீன்வரத்து அதிகம் இருக்கும் என கடல் வள ஆராய்ச்சியாளர்கள், மீனவர்கள் கணித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைவதை அடுத்து நாளை மறுநாள் காலை படகுகள் கடலுக்கு செல்ல டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் வெளியூர் சென்று சொந்த ஊர்களுக்கு திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications