டீசல், கேஸ் விலை இப்போதைக்கு உயராது என்கிறது மத்திய அரசு!

பெட்ரோல் விலை 11 சதவீதம், அதாவது ரூ. 7.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவற்றின் விலைகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், பெட்ரோல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இதையடுத்து டீசல், சமையல் கேஸ் விலைகளை உயர்த்த காங்கிரஸ் தலைவர் சோனியா அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று நிருபர்களிடம் பேசிய ரெட்டி, டீசல், மண்ணெண்ணெய், சமையல் கேஸ் விலைகளை நான் இப்போதைக்கு தொடப் போவது இல்லை. மேலும் டீசல், சமையல் கேஸ் விலைகளை மறுபரிசீலனை செய்வதற்கான மத்திய அமைச்சர்கள் குழுக் கூட்டம் ஏதும் இப்போதைக்கு நடக்கப் போவதும் இல்லை என்றார்.
ஆனாலும் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான போராட்டங்கள் கொஞ்சம் அடங்கிய பின் ஜெய்பால் ரெட்டி தனது வேலையைக் காட்டுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications