கடைசி நிமிடத்தில் சாட்டை எடுத்த சகாயம்: ஊழல் தாசில்தார், வி.ஏ.ஓ.க்கள் சஸ்பெண்ட்
மதுரை: பிரச்சனைக்குரிய நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகளை மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மதுரை மாவட்டத்தில் ஒரு தனியார் நில விற்பனை மற்றும் பட்டா மாறுதல் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரச்சனைக்குரிய நிலத்திற்கு கடந்த 2010ம் ஆண்டு மூன்று பட்டாக்களை வழங்கிய அப்போதைய வடக்கு தாசில்தார் அர்ஜுனன் (தற்போது விமான நிலைய நில எடுப்பு தாசில்தார்), வருவாய் ஆய்வாளர் சுரேஷ் பிரட்ரிக், சிறுதூர் வி.ஏ.ஓ.ஜோதிபாசு ஆகியோரை மதுரை கலெக்டர் சகாயம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அதே போல கடந்த மே 21ம் தேதி நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொய்கரைப்பட்டி வி.ஏ.ஓ. பேரின்பத்தின் லஞ்சம் மற்றும் அடாவடி குறித்து பொது மக்கள் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் வி.ஏ.ஓ. பேரின்பத்தை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்ட கலெக்டர் சகாயம் இன்று பணியில் இருந்து விடைபெற்றார். அவருக்கு பதிலாக அன்சுல் மி்ஸ்ரா மதுரை மாவட்ட கலெக்டராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications