For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத் தேர்தலில் போட்டியிட ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மின்விசிறி சின்னம் ஒதுக்கீடு

Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திராவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு, மின்விசிறி சின்னம் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவி்ட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள அனந்தபுரம், நரசன்னபேட்டரி ராமச்சந்திராபுரம், பரகானா, திருப்பதி, ஓங்கோல் உள்ளிட்ட 18 சட்டசபை தொகுதிகளுக்கும், நெல்லூர் பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இடைத்தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் இதில் ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு எந்த சின்னமும் ஒதுக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ஓய்.எஸ்.ஆர். கட்சிக்கு பொது சின்னம் ஒதுக்குமாறு, கடந்த மாதம் அக்கட்சியின் தலைவர் ஓய்.விஜயம்மா, தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்திருந்தார்.

இம்மனுவை பரிசீலித்த தேர்தல் ஆணையம் நேற்று, ஓய்.எஸ்.ஆர் கட்சிக்கு பொது சின்னமாக மின்விசிறி (சீலிங் பேன்) சின்னத்தை ஒதுக்கி உள்ளதாக அறிவித்தது.

முன்னதாக இடைத்தேர்தலில் போட்டியிட 255 வேட்பாளர்கள் மனுத் தாக்கல் செய்தனர். அதில் 25 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை திரும்ப பெற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
The Election Commission allotted the 'ceiling fan' symbol to YSR Congress candidates based on its assurance that preference would be given to erstwhile candidates to opt for an election symbol of their choice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X