யாருக்காக?.. கைத்தறி அமைச்சர் வெட்டிய கிடா பேத்திக்கா?, பதவிக்கா?!
ராமநாதபுரம்: அமைச்சர் டாக்டர். சுந்தர்ராஜன் தனது குலதெய்வம் கோவிலில் பேத்திக்கு மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து கொடுத்தார். ஆனால் அவர் உண்மையிலேயே தனது பதவிக்கு ஆபத்து வராமல் இருக்கத் தான் கிடா வெட்டினார் என்று எதிர் கோஷ்டியினர் தெரிவித்துள்ளனர்.
தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் டாக்டர் சுந்தர்ராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் உள்ள கூரிச்சாத்த அய்யனார் கோவிலில் தனது பேத்திக்கு உறவினர்கள் சகிதம் பயபக்தியோடு மொட்டை போட்டு கிடா வெட்டி விருந்து கொடுத்தார். மேலும் அதிமுகவைச் சேர்ந்த 6 ஒன்றியச் செயலாளர்களையும், முக்கிய நிர்வாகிளையும் அழைத்து விருந்து வைத்துள்ளார்.
இது பற்றி அறிந்த எதிர் கோஷ்டி, அமைச்சர் தனது பதவிக்கு ஆபத்து வரக் கூடாது என்பற்காக தான் தனது குலதெய்வம் கேவிலில் கிடா வெட்டியுள்ளார். ஆனால் இதை மறைக்க தனது பேத்திக்கு நேர்த்திக் கடன் என கூறுகின்றார் என்று பிட்டை போட்டுவிட்டு சென்றுவிட்டனர்.
இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் தரப்பு கிடா வெட்டுவதிலுமா அரசியல் செய்வார்கள் என தலையில் அடித்துக் கொண்டனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications