வெயிலுக்காக பள்ளிகள் திறப்பு தள்ளிப் போடப்பட மாட்டாது- கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்து வி்ட்ட போதிலும் வெயிலின் தாக்கம் சற்றும் குறையாமல் இருப்பதால் பள்ளிக்கூடத் திறப்பு தள்ளிப் போகுமா என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறையும் என்பதால் மறு திறப்பு தள்ளிப்போக வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறைக்குப் பின்னர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 1ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் ஜூன் 4 மற்றும் 7ம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது.
ஆனால் தமிழகத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தொடர்ந்து பல ஊர்களில் 100 டிகிரியைத் தாண்டியே வெயில் உள்ளது. இதனால் மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோரும் கவலையில் உள்ளனர். வெயில் சற்று குறைந்த பி்ன்னர் பள்ளிகளைத் திறக்கலாமே என்று பெற்றோர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகாது என்று அதிகாரிகள் கூறுகி்ன்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் கத்திரி வெயில் முடிந்து விட்டதால் வெயிலின் உக்கிரம் படிப்படியாக குறைந்து விடும். எனவே பள்ளிகள் திறப்பு தள்ளிப்போடப்பட மாட்டாது என்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications