வரும் 4ம் தேதி எம்.பி. பதவியேற்கிறார் சச்சின் டெண்டுல்கர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் வரும் 4ம் தேதி எம்.பி.யாக பதவியேற்க உள்ளதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்(39). கிரிக்கெட் உலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், எம்.பி.யாக பதவி வகித்து அரசியல் உலகில் நுழைகிறார். கடந்த ஏப்ரல் மாதம் சச்சின், பாலிவுட் நடிகை ரேகா, தொழிலதிபர் அனு ஆகா ஆகியோருக்கு எம்.பி.பதவி அளிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சச்சினை தவிர மற்ற 2 பேரும் எம்.பி. பதவிகளை ஏற்றுக் கொண்டனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெற்று வந்ததால், சச்சினால் எம்.பி. பதவியை ஏற்க முடியவில்லை.

எனவே வரும் 4ம் தேதி ராஜ்யசபா சபாநாயகர் ஹமீது அன்சாரி மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் சச்சின் எம்.பி.யை ஏற்க உள்ளார். இத்தகவலை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+