சூதாட்ட கும்பலிடம் பணம் பறிமுதல்-வழக்கு பதிவு செய்யாமல் விட்ட போலீசார் சஸ்பெண்ட்
நாகர்கோவில்: கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து வழக்கு பதிவு செய்யாமல் விட்ட கியூ பிராஞ்ச் போலீசாரை சஸ்பெண்ட் செய்து டிஐஜி உத்தரவி்ட்டுள்ளார்.
கன்னியாகுமரி அருகே ஒரு லாட்ஜில் கியூ பிராஞ்ச் போலீஸ் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த லாட்ஜில் இருந்த ஒரு அறையில் 6 பேர் பணம் வைத்து சீட்டாடிக் கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். ரூ.4 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்டது. பின்னர் போலீசார் அந்த கும்பல் மீது எந்தவித வழக்கும் பதிவு செய்யாமல் பணத்தை மட்டும் எடுத்து கொண்டு சென்றுவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த உயர் போலீ்ஸ் அதிகாரிகள், ரூ.4 லட்சம் வரை பணம் கைப்பற்றப்பட்ட பிறகு, உள்ளூர் போலீசாரிடம் கூட தகவல் தெரிவிக்காதது குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் சீட்டு விளையாடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்காதது குறித்தும் விசாரணை நடத்த டிஎஸ்பிக்கு உத்தரவிடப்பட்டது.
இது குறித்து எஸ்.பி.பாஸ்கரன் விசாரணை நடத்தி அறிக்கை அளித்தார். அதன்படி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் பென்சாமை சஸ்பெண்ட் செய்து கியூ பிரிவு டிஐஜி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏட்டுகள் ராஜபாண்டியன், ரமேஷ் ஆகியோரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications