நாளைய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப் போவது என்ன?

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொள்கின்றனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்திருக்கும் சூழல், மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள், வரலாறு காணாத பெட்ரோல் விலை உயர்வு என்பது போன்ற ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முன் நிற்கும் பூதாகரமான பிரச்சனைகளை சமாளிப்பது குறித்து நாளைய கூட்டத்தில் தீவிரமாக ஆராயப்பட இருக்கிறது.
இதேபோல் பிரதமர் மன்மோகன்சிங் மீதான நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு இப்போது பெரும் தலையிடியாக இருக்கிறது. இதுபோதாதென்று அன்ன ஹசாரே மற்றும் ராம்தேவ் ஆகியோர் ஊழலுக்கு எதிராக தமது போராட்டங்களை தீவிரப்படுத்தியிருப்பது பற்றியும் விவாதிக்கப்படக் கூடும்.
இதேபோல் ஆந்திரா மற்றும் கர்நநாடக மாநில காங்கிரஸ் கட்சி நிலைமைகள் குறித்தும் நாளைய கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியை சிறையிலடைத்த நிலையில் காங்கிரஸுக்கு எதிராக ஜெகனுக்கு ஆதரவாக அனுதாப அலை வீசி வருகிறது. இதேபோல் கர்நாடக மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா செய்திருக்கிறார். இந்த நிலைமையை சீர் செய்வது தொடர்பாகவும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட உள்ளது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரைத் தேர்வு செய்வது தொடர்பாக சோனியா காந்திதான் இறுதி முடிவெடுப்பார் என்பதால் நாளைய கூட்டத்தில் இதுபற்றி அதிகம் விவாதம் இருக்காது என்று கூறப்பட்டாலும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் மும்பையில் நடைபெற்ற பாரதிய ஜனதாவின் செயற்குழுவின் கூட்டத்துக்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுமாறு திரிணாமுல் காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் பெட்ரோல் விலை உயர்வின்போது ஆட்சியைவிட்டு வெளியேற நேரிடும் என்று திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமல்ல திமுகவும் கூட மிரட்டிப் பார்த்திருந்தது. இப்படி முறுக்கிக் கொண்டு நிற்கும் கூட்டணிக் கட்சிகளை வைத்துக் கொள்வதா? அல்லது லாலு, முலாயம், மாயாவதி போன்ற சக்திகளுடன் அரவணைத்துப் போவதா? என்பது பற்றியும் நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications