பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேரை குண்டுவீசி கொல்ல முயற்சி
திண்டுக்கல்: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான நடராஜ், மாடசாமி, சன்னியாசி ஆகிய மூன்று பேரை வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஜனவரி 10ம் தேதி அன்று இரவு திண்டுக்கல் மாவட்டம் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மூலக்கரை சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், இவருக்கும் இருந்த வந்த முன்பகையே இதற்கு காரணம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் சுபாஷ் பண்ணையார் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
மொத்தம் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நடராஜ், மாடசாமி, சன்னியாசி ஆகியோர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் தினமும் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி அவர்களும் கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவர்கள் கார் மீது நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு அங்கிருந்து தப்பியோடியது. இதில் கார் டிரைவர் உள்பட அதில் இருந்த 4 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே வழக்கில் ஜாமீனில் வெளிய உள்ள குற்றவாளியான கோழி அருள் நெல்லை மாவட்டம் சுரண்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வந்தபோது அவரை கொல்ல முயற்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications