புதுவையில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவு தாமதம்: மாணவர்கள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் பிற்பகல் 1.30 மணிக்கு வெளியானது. இதில் தஞ்சை மாணவர் ஸ்ரீநாத் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். இதேபோன்று புதுவையிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று பிற்பகலே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அங்கு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது மாலை 4 மணிக்கு தான் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குநகரம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு 18000 பேர் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதியுள்ளனர். இதேபோல் பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவு வெளியாவதிலும் சிடி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தினால் தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+