பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: மீண்டும் படாதபாடுபடும் சென்னைவாசிகள்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஒரு வாரகாலமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் கப்பல்கள் மூலம் பெட்ரோல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நிலைமை சீரடைவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.
இந்த நிலைமையும் நிம்மதியும் சில நாட்கள் கூட நீடிக்கவில்லை. இன்று மீண்டும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஹிந்துஸ்தான் நிறுவன பெட்ரோல் பங்குகளின் இருப்பு நேற்று மாலையே தீர்ந்து போய்விட்டது. இதனால் ஹெச்.பி பெட்ரோல் பங்குகள் இன்று இழுத்து மூடப்பட்டன.
இதனால் இன்று மீண்டும் சென்னைவாசிகள் சிரமத்துக்குள்ளாயினர். அனேகமாக இன்று மாலைக்குள் நிலைமை சீரடையலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications