கண் அறுவை சிகிச்சையால் ஓய்வெடுக்கிறாராம் சசி: சொத்து குவிப்பு வழக்கை "இழுத்தடி...."க்கும் சசிகலா

1991-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த போது ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்பது வழக்கு. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீண்ட இழுத்தடிப்புகளுக்குப் பிறகு ஜெயலலிதாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. ஆனால் சசிகலாவிடம் வாக்கு மூலம் பெறுவதற்கும் போதும் போதும் என்றாகிவிடும் போல் இருக்கிறது.
பலமுறை கடுமையாக எச்சரித்த போதும் அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகமல் ஏதோ ஒரு காரணம் சொல்லி சசிகலா டிமிக்கி கொடுத்தே வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நேற்றைய விசாரணையின் போதும் சசிகலா ஆஜராகவில்லை. அவர் சார்பில் வழக்கறிஞர் மணிசங்கர் மனு ஒன்றை நீதிபதி மல்லிகார்ஜூனையாவிடம் கொடுத்தார். அதில், சசிகலாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதால் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி ஓய்வெடுத்து வருகிறார் என்று கூறப்பட்டிருந்தது.
இதில் நீதிபதி மல்லிகார்ஜுனையாவும் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் செம கடுப்படைந்தனர். சசிகலாவுக்கு அறுவை சிகிச்சை செய்ததற்கான மருத்துவ சான்றிதழ் எங்கே என்றும் ஆச்சார்யா கேள்வி எழுப்பினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வரும் 18-ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
அன்றைய தேதியில் என்ன சிறப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஓய்வெடுப்பாரோ சசிகலா? என்கிறது பெங்களூர் நீதிமன்ற வட்டாரம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications