தாமதமாக தகவல் அளித்த வங்கி அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்!
சென்னை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்ட நபருக்கு தாமதமாக தகவல் அளித்த வங்கி மேலாளருக்கு மத்திய தகவல் ஆணையம் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் ரஞ்சி ஆனந்தன். இவர் சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள ஒரு வங்கியில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில தகவல்களை கேட்டு கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவரது மனுவிற்கு வங்கியில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி, வங்கியின் செயல் இயக்குநரிடம் ரஞ்சி ஆனந்தன் அப்பீல் செய்தார். ஆனால் அவரும் தகவல் வழங்கும்படி பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிடவில்லை.
இந்த நிலையில் வங்கியின் பொது தகவல் அதிகாரியான பாலசுப்ரமணியத்துக்கு எதிராக மத்திய தகவல் ஆணையத்தில் ரஞ்சி ஆனந்தன் புகார் செய்தார்.
இவரது புகார் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம்,
மனுதாரர் ரஞ்சி ஆனந்தன், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 2011 செப்டம்பர் 19ம் தேதி விண்ணப்பித்து உள்ளார். அவருக்கு 2011 அக்டோபர் 19ம் தேதி தகவல் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் 2012 மே 18ம் தேதி தான் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
எனவே பொது தகவல் அதிகாரி பாலசுப்பிரமணியம் தகவலை 100 நாட்களுக்கு மேல் காலதாமதமாக வழங்கி உள்ளார். தகவல் பெறும் உரிமை சட்டம் பிரிவு 20(1) ன் படி காலதாமதமாக தகவல் வழங்கியதற்காக வங்கி அதிகாரி பாலசுப்ரமணியத்துக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இத்தொகையை அவரது சம்பளத்தில் இருந்து வங்கி நிர்வாகம் பிடித்தம் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications