அமைச்சரின் முன்னிலையில் தேர்தல் அதிகாரியை மிரட்டிய பாதுகாப்பு அதிகாரி மீது வழக்கு!
புதுக்கோட்டை: தேர்தல் அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டிய, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக மாநில அமைச்சர்கள் முகாமிட்டு பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிப்பின் போது, துறை அமைச்சர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அம்பாள்புரம் பகுதிக்கு மண்டல பொறுப்பாளராக, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியனும், ஒருங்கிணைப்பாளராக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலர் வீரமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகளில் அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் அதிமுகவினர் வீடுவீடாக சென்று நேற்று ஓட்டு சேகரித்தனர். இவர்களை துணை தாசில்தார் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் பின் தொடர்ந்து சென்று கண்காணித்தனர்.
அப்போது ஆத்திரமடைந்த அமைச்சர் செல்லப்பாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி, அவரது முன்னிலையில், துணை தாசில்தார் நாகராஜன் தலைமையிலான பறக்கும் படையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது பாதுகாப்பு அதிகாரி, அவர்களை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
இது குறித்து பறக்கும் படை துணை தாசில்தார் நாகராஜன் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் அமைச்சர் செல்லபாண்டியனின் பாதுகாப்பு அதிகாரி (பி.எஸ்.ஓ.) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications