கேரள அரசு அலுவலகங்களில் செல்போனை பயன்படுத்த தடை விதிப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் அரசு அதிகாரிகள் அலுவலகத்திற்குள் செல்போன் பேசக்கூடாது என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அலுவலக நேரத்தில் அதிகாரிகள் தங்களது சொந்த விஷயங்களை செல்போனில் பேசுவதால் அலுவலக வேலைக்காக தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பொதுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில், அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் செல்போன் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அந்தந்த துறைத் தலைவர்களின் பொறுப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்ப்பு
ஆனால் இதற்கு அதிகாரிகளிடையே கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. அவசர காலங்களில் மட்டும் செல்போனை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அரசு கூறுகிறது. செல்போனில் பேசாமல் இருக்கும்போது அவசர காலத்தை எப்படி முடிவு செய்ய முடியும் என்பது அவர்களின் கேள்வி.
இந்த உத்தரவின் நோக்கம் சரியானதுதான். ஆனால் நடைமுறை சாத்தியமில்லாதது'' என்பது அரசு ஊழியர்களின் கருத்து.
பான்பராக், குட்கா, சூப்பர், மாவா போன்ற போதைப் பொருட்களுக்கு அண்மையில் கேரள அரசு தடை விதித்திருந்தது.












Click it and Unblock the Notifications