For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜசேகர ரெட்டி மரணம் தொடர்பான் விசாரணையை நிறுத்த சிதம்பரத்தை சந்தித்தாரா சந்திரபாபு?

By Mathi
Google Oneindia Tamil News

Chidambaram
ஓங்கோல்: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் மரணமடைந்ததில் சதி இருப்பதாக அவர்து குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடப்பாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ராஜசேகர ரெட்டியின் விஜயாம்மா பேசியதாவது:

ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் சதி இருக்கிறது. ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டியில் பதிவாகியுள்ள கடைசிநேர உரையாடங்களை பகிரங்கப்படுத்த வேண்டும். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஒரு முதலமைச்சராக இருந்தவர். அவர் சென்ற ஹெலிகாப்டரில் கிரண்குமார் ரெட்டி ஏன் பயணம் மேற்கொள்ளவில்லை?

ராஜசேகர ரெட்டியின் மரணம் தொடர்பாக மீண்டும் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும். எனது மகன் ஜெகன் மோகன் ரெட்டியை பொய்யான குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைத்திருக்கின்றனர் என்றார்.

ஓங்கோலில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகளான சர்மிளா, தமது தந்தையின் மரணம் குறித்து விசாரணை நடந்த போது மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ரகசியமாக சந்தித்துப் பேசினார். அதன் பிறகே விசாரணை நிறுத்தப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

English summary
The YSR Congress public meeting at Ongole on Saturday attracted large crowds and Sharmila Reddy, the sister of YSRC president Y.S. Jagan Mohan Reddy, delivered a fiery speech. She humbly started with: “I, Sharmila, daughter of YSR and sister of Jagananna, came to Ongole to meet the beloved people of YSR.” Ms Reddy alleged that TD president N. Chandrababu Naidu had secretly met with Union minister P. Chidambaram seeking to stop the CBI probe against him. This was the reason there was no probe against the TD chief, she said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X