திருவனந்தபுரத்தில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் சிறை
திருவனந்தபுரம்: டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவுவதால் திருவனந்தபுரத்தில் பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் தினேஷ் உத்தரவிட்டுள்ளார்.
கேரள தலைநகர் திருவனந்தபுரம் நகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் புறநகர் பகுதியான விளம்பிசாலை என்ற இடத்தில் கொட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு இப்பகுதியில் குப்பை கொட்ட விளம்பிசாலை பஞ்சாயத்து எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து திருவனந்தபுரம் மாநகராட்சி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக குப்பைகளை சேகரிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளை பொது இடங்கள் மற்றும் ஆறு, வாய்கால்களில் வீசிச் செல்வது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக திருவனந்தபுரம் நகர் பகுதியில் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகம் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் குப்பை கொட்டினால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அம்மாவட்ட கலெக்டர் தினேஷ் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications