For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடைத்தேர்தல்: அமைச்சர் செல்லூர் ராஜு, மேயர் ராஜன் செல்லப்பா மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கார்த்திக் தொண்டமான், தேமுதிக சார்பில் ஜாகீர் உசேன், ஐ.ஜே.கே. சார்பில் சீனிவாசன் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதிரித்து தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் முதல், முதல்வர் ஜெயலலிதா வரை தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட அசோக் நகர் பகுதிகளில் அனுமதியின்றி இரட்டை இலை சின்னம், கட்சிக் கொடி ஆகியவற்றுடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக சென்று வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி கமிஷனர் சர்தார் கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மேயர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
Election rules violation case has been registered against minister Sellur Raju and Madurai Mayor Rajan Chellappa. They are accused of violating the EC rules while campaigning in Pudukkottai ahead of bypoll.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X