பெங்களூரில் சிக்கித் தவித்த ஆதீனம் மதுரை திரும்பினார்!
மதுரை: பெங்களூருக்கு நித்தியானந்தாவுடன் சென்று அங்கு பிடதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மதுரை ஆதீனம் தற்போது மதுரைக்கு திரும்பியுள்ளார். நித்தியானந்தா திடீரென தலைமறைவானதால் பெரும் தவிப்புக்குள்ளாகியிருந்த ஆதீனம் தற்போது மதுரை ஆதீன மடத்திற்குத் திரும்பியுள்ளாராம்.
ஜூன் 5ம் தேதி மதுரை ஆதீனத்திற்கு குரு பூஜை நடத்தினார் நித்தியானந்தா. அவருக்கு கனகாபிஷேகம் செய்தார். இதையடுத்து இருவரும் ஜோடியாக பெங்களூர் போனார்கள். அங்கு பிடதி ஆசிரமத்தில் தங்கினார் மதுரை ஆதீனம்.
இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அது பெரும் கலாட்டாவில் போய் முடிந்தது. இதையடுத்து நித்தியானந்தா உள்ளிட்டோர் மீது பத்திரிக்கையாளர்கள் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்னர். இதனால் நித்தியானந்தா மடத்தை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
நித்தியானந்தாவை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் 7 பேரை கைது செய்துள்ளனர். நித்தியானந்தாவுக்கு எதிராக கர்நாடகத்தில் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்துள்ளன.இதனால் மடத்திற்குத் திரும்பமுடியாத நிலையி்ல் இருக்கிறார் நித்தியானந்தா.
அவர் மதுரையில் தங்கியிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. இருப்பினும் உறுதியாகத் தெரியவில்லை. ஓய்வெடுக்க வந்த இடத்தில் பஞ்சாயத்தாகிப் போனதால் தவித்துப் போய் விட்டார் மதுரை ஆதீனம். இந்த நிலையில் தற்போது நித்தியானந்தா ஆலோசனைப்படி அவர் மதுரைக்குத் திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. தனது மடத்திற்கே ஆதீனம் திரும்பி விட்டாராம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications