காய்கறி விலை கிடுகிடு: பர்சைத் தடவும் சைவப் பிரியர்கள்

நெல்லை மேற்கு மாவட்டத்தில் ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் இரண்டும் முக்கிய காய்கறி மார்க்கெட்டுகளாக திகழ்கின்றன. இந்த மார்கெட்டிலிருந்து தினமும் கேரளாவுக்கு சராசரியாக 50 லாரிகளில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகிறது. வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட சில காய்கறிகள் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து மார்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் கேரட்,பீன்ஸ், பீட்ரூட், முட்டைகோஸ் ஆகிய காய்கறிகள் நீலகிரி, கொடைக்கானல் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகிறது.
கோடை காலம் என்பதால் கடந்த இரு மாதங்களுக்கும் மேலாக காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கேரட் கிலோ ரூ.50க்கு விற்கப்படுகிறது. மேலும் பீன்ஸ், அவரை உள்ளிட்டவை கிலோ ரூ.60ஐ தாண்டிவிட்டது. மூட்டைகோஸ் கிலோ ரூ.40க்கு விற்கப்படுகிறது. மல்லி இலை ரூ.50க்கும், உள்ளி விலை ரூ.40க்கும் உயர்ந்துவிட்டது. கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை ஆகியவை உள்ளூரில் பயிரிடப்பட்டாலும் மற்ற காய்கறிகள் விலைகள் உயர்ந்ததால் பொதுமக்கள் இந்த மூன்றையும் அதிகமாக கேட்பதால் அவைகளின் விலையும் ரூ.30க்கு மேல் உயர்ந்துள்ளது.
உருளைக்கிழக்கு, சேனைக்கிழங்கு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. சீனி அவரைக்காய், பூசனி, புடலை, மாங்காய், முருங்கை ஆகிய காய்கறிகள் கிலோ ரூ.20க்கு கிடைக்கின்றன. இதனால் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்கள் கூடுதல் காய்கறி செலவை எதில் சரிகட்டுவது என திகைத்து வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications