2 ஆண்டுகளில் 2வது முறையாக சிறைக்குச் செல்லும் நித்தியானந்தா!
பெங்களூர்: நித்தியானந்தா 2 ஆண்டுகளில் 2வது முறையாக சிறைக்குச் செல்கிறார். ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கி கடந்த 2010ம் ஆண்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அடிதடி தாக்குதல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போகிறார்.
கடந்த 2010ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு வீடியோ படம் ஒளிபரப்பானது. அதில் நித்தியானந்தாவும், ஒரு நடிகையும் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நித்தியானந்தாவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போராட்டத்தையும், வழக்கையும் சந்திக்க முடியாமல் நித்தியானந்தா தலைமறைவானார். அவரை தீவிரமாக தேடி வந்த போலீஸார், ஒரு மாத தலைமறைவுக்குப் பின்னர் ஏப்ரல் 21ம் தேதி ஹிமாச்சல் பிரதேச மாநிலம் அர்கி என்றஇடத்தில் வைத்து சிக்கினார்.
இதையடுத்து அவர் ராம்நகரம் கொண்டு வரப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 2010ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி ஜாமீன் கிடைத்தது.
முதல் முறையாக சிறை சென்ற நித்தியானந்தா 52 நாட்களை சிறையில் கழித்தார்.
இந்த நிலையில் தற்போது 2வது முறையாக சிறைக்குச் செல்லும் நிலை நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த முறை அடிதடி தாக்குதல் வழக்கில் அவர் சிக்கியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications