கவர்ச்சிகரமான திருமண விளம்பரம் கொடுத்து 22 பெண்களிடம் ரூ.12 லட்சம் லவட்டிய நபர்
ஹைதராபாத்: பிரபல திருமண இணையதளத்தில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் கொடுத்து 22 பெண்களிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ரவி கிஷோர் போஜங்கி. பி.டெக். பட்டதாரி. அவர் பிரபல திருமண இணையதளம் ஒன்றில் தனக்கு பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்தார். பி.டெக். படித்த அவர் தான் மும்பை ஐஐடியில் படித்ததாகவும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். முடித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் உயரிய பதவியில் இருப்பதாகவும் அந்த இணையதளத்தில் பொய்யான தகவலைத் தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த பல பெண்கள் நல்ல மாப்பிள்ளையாக இருக்கிறாரே என்று நினைத்து அவரை ஆன்லைனில் தொடர்பு கொண்டனர். இது போன்று சுமார் 54 பெண்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ரவி கிஷோரும் அவர்களுடன் ஆன்லைனில் பேசி வந்துள்ளார். 54 பேரில் 22 பேரிடம் தனது தந்தைக்கு அறுவை சிகிச்சை, தாய்க்கு விபத்து ஏற்பட்டுவிட்டது என்று ப்லவேறு பொய்களைக் கூறி அவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
அவர் வேலைக்கே போகாமல் இதுபோன்று பெண்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பணம் கொடுத்தவர்களில் ஒரு பெண் சுதாரித்துக் கொண்டு இது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கடந்த 11ம் தேதி ரவி கிஷோரை கைது செய்தனர்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது 54 பெண்களுடன் ஆன்லைனில் தொடர்பு வைத்துள்ளதாகவும், அதில் 22 பேரிடம் இருந்து ரூ.12 லட்சம் பணம் பெற்றதாகவும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications