திராவிடக் கட்சிகளால் தமிழகம் கெட்டு குட்டிச்சுவராப் போச்சு: ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் பாமக போட்டியிடும். அதில் குறைந்தது 10 தொகுதிகளையாவது கைப்பற்றும். கடந்த 45 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளால் தமிழ் மொழி வளரவில்லை மாறாக அழிந்துவிட்டது. ஆங்கிலம் கலந்து கலப்பு மொழியாக தமிழ் மொழி மாறும் நிலை உருவாகும். தமிழ் பண்பாட்டையே கெடுத்துவிட்டனர்.
திராவிடக் கட்சிகள் நதிநீர் உரிமையைப் பெற்றுத் தரவில்லை. அதனால் இன்று நாம் உரிமைகளை எல்லாம் இழந்துவிட்டோம். 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா அரசியல், திராவிடக் கட்சிகள் ஆட்சியால் மது மயக்கம் மற்றும் சினிமா மோகத்தால் இளைஞர்கள் கெட்டுவிட்டனர். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும், இலவசங்களை அள்ளிக் கொடுத்தும் திராவிடக் கட்சிகள் மாறி, மாறி ஆட்சிக்கு வருகின்றன.
திராவிடக் கட்சிகளால் கட்டணமில்லாமல் தரமான கல்வி கிடைப்பதில்லை, மேலும் அக்கட்சிகள் தனியார் பள்ளின் கல்விக் கொள்ளைக்கு துணையாக நின்று அதை வணிகமாக்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து மாணவர்கள், இளைஞர்கள் முதல் முதியவர் வரை கெடுத்துவிட்டனர்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு மாற்று ஆட்சியை உருவாக்கும் எண்ணத்தில் பாமக மக்களை அணுகி புதிய அரசியல் தத்துவங்கள், கொள்கைகள் மற்றும் நம்பிக்கைகளை விதைத்து வருகிறது. வரும் 2016ம் ஆண்டு தமிழக மக்கள் பாமகவை ஆட்சியில் அமரவைப்பார்கள் என்று நம்புகிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் தான் முதன்முதலாக கையெழுத்திடுவோம்.
தமிழகத்தில் மதுவை ஒழிக்க நாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகிறோம். இந்நிலையில் வரும் ஜூலை 11ம் தேதி தமிழகத்தில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம் நடத்தவிருக்கிறோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications