எழும்பூர்-விழுப்புரம் இடையே பராமரிப்பு பணி : 5 நாட்களுக்கு ரயில்கள் லேட்டாகும்

விழுப்புரம் அருகே உள்ள பேரணி யார்டில் எலக்ட்ரிக்கல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் சென்னை எழும்பூர்-விழுப்புரம் மார்கத்தில் இயக்கப்படும் ரெயில்கள் தாமதமாக வந்து செல்லும். 15, 16, 17, 18 மற்றும் 20 ஆகிய 5 நாட்கள் வந்து செல்லும் ரெயில்கள் விவரம் வருமாறு:-
விழுப்புரம்-மேல்மருவத்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயிலும், புதுச்சேரியில் இருந்து திருப்பதி செல்லும் பயணிகள் ரெயிலும் புதுச்சேரி-திண்டிவனம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து சென்னை வரும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்தில் 50 நிமிடங்கள் நின்று சென்னைக்கு தாமதமாக புறப்பட்டு வரும்.
திருச்சியில் இருந்து சென்னை எழும்பூர் வரும் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் முண்டியம்பாக்கத்தில் 30 நிமிடம் நின்று சென்னைக்கு தாமதமாக வரும்.
மதுரையில் இருந்து சென்னை வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மதுரையில் இருந்து 25 நிமிடங்கள் தாமதமாக புறப்படும். சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும்.
புதுச்சேரியில் இருந்து புதுடெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், ராமேஸ்வரத்தில் இருந்து வாரணாசி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு 85 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.
சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திண்டிவனத்தில் 30 நிமிடங்களும், மயிலத்தில் 50 நிமிடங்களும் நின்று செல்லும். சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ஒலக்கூர் ரெயில் நிலையத்தில் 80 நிமிடங்கள் நின்று செல்லும்.
புவனேஸ்வரில் இருந்து புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், புவனேஸ்வரில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் 95 நிமிடங்கள் தாமதமாக விழுப்புரம் ரெயில் நிலையத்துக்கு வரும். இதேபோல் மேலும் பல ரெயில்கள் 30 நிமிடங்கள் தாமதமாகவே வந்து செல்லும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications