Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் மட்டுமே போட்டி: அப்துல் கலாம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

Abdul Kalam
டெல்லி: ஜனாதிபதி பதவிக்கு டாக்டர் அப்துல் கலாமின் பெயரை பரிந்துரைக்கும் முன் அவருடன் சமாஜ்வாடிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் தொலைபேசியில் பேசி அவரது அனுமதியை வாங்கியதாகத் தெரிகிறது.

ஆனால், இது குறித்து அப்துல் கலாமிடமிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வமான கருத்தும் வெளிவரவில்லை.

பாஜக ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்பட்டு அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு வென்றார் கலாம். ஆனால், அடுத்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தபோது சோனியா காந்தியை பிரதமராக கலாம் விடவில்லை. அவர் வெளிநாட்டுக்காரர் என்பதால் அதை கலாம் அனுமதிக்கவில்லை. அதிலிருந்தே காங்கிரஸ்-கலாம் இடையே நல்லுறவு இல்லை.

இந் நிலையில், கலாமின் பதவிக் காலம் முடிந்தபோது மீண்டும் அவரையே நிறுத்தலாம் என பாஜக கூட்டணி கூறியது. ஆனால், கலாம் முதலில் அமைதி காத்தார். பின்னர் மீண்டும் போட்டியிடத் தயார் என்று அறிவித்தார்.

ஆனாலும், அவரது விருப்பத்தை நிராகரித்துவிட்ட காங்கிரஸ் பிரதீபா பாட்டீலை ஜனாதிபதியாக்கியது.

இந் நிலையில் மீண்டும் கலாமின் பெயர் ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது. 3 மாதங்களுக்கு முன்பே இவரது பெயரை முலாயம் சிங்கும், பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் கூறி வந்தனர். பாஜக, அதிமுகவும் கூட கலாமையே மீண்டும் ஜனாதிபதியாக்கலாம் என்றன. திமுகவும் இதையே கூறியது.

ஆனால், கலாமுக்கு காங்கிரசின் ஆதரவு இல்லை என்பது நிச்சயமானவுடன் திமுக அமைதி காக்கத் தொடங்கியது. ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் திடீரென முன்னாள் மக்களவை சபாநாயகர் பி.ஏ.சங்மா ஜனாதிபதியாக ஆதரவு தெரிவித்தனர்.

இந் நிலையில் தான் மீண்டும் கலாமின் பெயர் முன் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னிடம் பேசிய முலாயம் மற்றும் மம்தாவிடம், எனக்கு அனைத்துக் கட்சிகளின் ஒருமனதான ஆதரவு இருந்தால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கலாம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், காங்கிரசின் ஆதரவு அவருக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்ற நிலையில், கலாம் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவது மிக மிக அரிதே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+