நித்தியானந்தா ஆசிரமத்தில் கஞ்சா, காண்டம் சிக்கியதா?
பெங்களூர்: பிடதியில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்தில், சோதனை நடத்திய போலீஸார், அங்கு பெருமளவில் மது பாட்டில்கள், கஞ்சா, ஆணுறைகள் சிதறிக் கிடந்ததைப் பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தை கடந்த 2 நாட்களாக போலீஸார் சோதனையிட்டனர். அங்கிருந்த நித்தியானந்தாவின் ஆதரவாளர்கள் அனைவரும் யூனிபார்ம் உடையை தூக்கிப் போட்டு விட்டு போய் விட்டனர். சில வெளிநாட்டுக்காரர்கள் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆசிரமத்தில் அமைந்துள்ள ஒரு அறையைக் கூட விடாமல் ஒவ்வொரு அறையாக திறந்து சோதனையிட்டனர் அதிகாரிகளும், போலீஸாரும்.
இந்த நிலையில் ஆசிரமத்திற்குள்ளிருந்து சிலர் ஆசிரமத்திற்கு வெளியே பல பொருட்களை வீசியுள்ளனர். அவை கஞ்சாப் பொட்டலம், ஆணுறைகள், மது பாட்டில்கள், பல சிடிக்கள், பீடி, சிகரெட் என்று தெரிய வந்துள்ளது.
இவற்றை யார் வீசியது என்பது தெரியவில்லை. இவற்றை ஆசிரமத்திற்குள் யார் பயன்படுத்தினார்கள் என்பதும் தெரியவில்லை. வீசப்பட்டுள்ள சிடிக்களில் ஆபாசப் படங்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால் அந்த சிடிக்களை போலீஸார் கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications