விருதுநகரில் மப்பில் ரோந்து வந்த எஸ்.ஐ.- சஸ்பெண்ட் செய்த டி.ஐ.ஜி.
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்: பணியின் போது குடிபோதையில் இருந்த விருதுநகர் பாண்டியன் நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த 9ம் தேதி விருதுநகர் பாண்டியன் நகர் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிநாதன் ரோந்து பணிக்கு சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். இது குறித்து எஸ்.பி. அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜானகிநாதனை பிடித்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய உத்திரவிடப்பட்டது.
அதன்படி அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவர் மது அருந்தி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து டி.ஐ.ஜி. பாலநாகஜோதி உத்தரவின் பேரில் விருதுநகர் (பொறுப்பு) போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிநாதனை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications