தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்துக்கு ஜெயலலிதா வாழ்த்து
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.எஸ். சம்பத் கடந்த 1973 ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். அவர் ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசு துறைகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கடந்த 2009ம் ஆண்டு சம்பத் தேர்தல் ஆணையராக நிமயமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி ஜூன் 10ம் தேதி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து புதிய தலைமை தேர்தல் ஆணையராக வீரவள்ளி சுந்தரம் சம்பத் ஜூன் 11ம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அவர் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இப்பதவியில் நீடிப்பார். இந்நிலையில் அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் புது டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சம்பத்தை டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல முதன்மை உள்துறை ஆணையர் ஜஸ்பிர் சிங் பஜாஜ் நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications