ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தைப் புறக்கணித்தது சிவசேனா
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான மிகவும் முக்கியமான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தை சிவசேனா கட்சி புறக்கணித்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா? எதிர்த்து வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது போட்டியிட உள்ள சங்மாவை ஆதரிப்பதா? என்பது குறித்து இறுதி முடிவை தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்று அறிவிக்க உள்ளது. இது தொடர்பான கூட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் இந்தக் கூட்டத்தில் பாஜகவின் மிக முக்கியமான கூட்டணிக் கட்சியான சிவசேனா பங்கேற்கவில்லை. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் பால்தாக்கரேதான் இறுதி முடிவெடுப்பார் என்று கூறியுள்ளார்.
அனேகமாக சிவசேனாவே ஒரு வேட்பாளரை நிறுத்தக் கூடும் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் பாஜக சார்பில் பைரோன்சிங் செகாவத்தை பாஜகவும் கூட்டணிக் கட்சிகளும் முடிவெடுத்த போது மஹாராஷ்டிரா மாநிலத்தவர் என்பதற்காக பிரதீபா பாட்டீலை சிவசேனா ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications