100 அரசு பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்வு
நெல்லை: தமிழகம் முழுவதும் 100 அரசு உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு புதிதாக 900 முதுநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து தமிழக பள்ளி கல்வி துறை முதன்மை செயலாளர் சபிதா பிறப்பித்துள்ள உத்தரவி்ல் கூறியிருப்பதாவது,
தமிழகத்தில் 2012-13ம் ஆண்டு கல்வியாண்டில் 100 அரசு, நகராட்சி, மாநகராட்சி உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படுகிறது. தரம் உயர்த்தப்படும் உயர் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடம், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடமாக உயர்த்தப்படும்.
மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வரலாறு, பொருளியல், வணிகவியல் ஆகிய 9 பணியிடங்கள் அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறாக 100 அரசு பள்ளிகளுக்கும் 900 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளிகள் நிலை உயர்த்தப்படும் போது 1-40 என்ற ஆசிரியர்-மாணவர் விகிதம் பின்பற்றப்படுவதுடன் நடைமுறையில் உள்ள விதிகளை நிறைவு செய்ய வேண்டும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில் கூடுதல் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எம்.எல்.ஏ., எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி உதவியை பெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் எண்ணிக்கை வருமாறு,
திருச்சி-8, அரியலூர், நாகப்பட்டினம், தர்மபுரி, தேனி, திரூவாரூர், பெரம்பலூர் தலா 1, கோவை, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருப்பூர் தலா 2, கடலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி தலா 2, நெல்லை, ஈரோடு, நாமக்கல், திருவள்ளூர், மதுரை, விருதுநகர் தலா 4, காஞ்சிபுரம், தூத்துக்குடி, வேலூர், தலா 6, புதுக்கோட்டை, சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் தலா 5 என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications