ஜாமீன் வழங்க லஞ்சம் வழக்கு: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிபிஐ நீதிபதி பட்டாபிராமா ராவ் கைது
ஹைதராபாத்: சுரங்க ஊழலில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்க ரூ. 5 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிபிஐ சிறப்பு நீதிபதி பட்டாபி ராமா ராவ் இன்று கைது செய்யப்பட்டார்.
முன்னாள் கர்நாடக அமைச்சரான ஜனார்த்தன ரெட்டி மீதான ஒபுலபுரம் சுரங்க முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீலட்சுமிக்கு ஜாமீன் வழங்க மறுத்த சிபிஐ நீதிபதி பட்டாபிராமா ராவ் வழக்கின் முதன்மை குற்றவாளியான ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுத்திருந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பட்டாபிராமா ராவ் ரூ.5 கோடி லஞ்சம் வாங்கிக் கொண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த மே மாதம் 31ம் தேதி ஆந்திர உயர் நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட சோதனையில் பட்டாபிராமா ராவின் மகனுக்கு சொந்தமான 5 லாக்கர்களில் இருந்து 1.60 கோடியும், ஓய்வு பெற்ற ஆந்திரா நீதிபதி சலபதி ராவின் சகோதரர் பாலாஜி ராவிடம் இருந்து ரூ.1.40 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. ஜாமீன் வழங்க லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பட்டாபிராமா ராவ், சலபதி ராவ், ஜனார்த்தன ரெட்டியின் அண்ணன், பெல்லாரி எம்.எல்.ஏ. சோமசேகர் ரெட்டி உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பட்டாபிராமா ராவின் மகன் ரவிச்சந்திரா மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதி டிவி சலபதி ராவ் ஆகியோர் கடந்த சனிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டனர். முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள பட்டாபிராமா ராவ், சலபதி ராவ், சலபதி ராவின் உறவினர் பி. ஸ்ரீனிவாஸ் ராவ், மூத்த வழக்கறிஞர் உமா மகேஷ்வர் ராவ் ஆகியோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையில் சில முக்கியமான பொருட்கள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் இதே வழக்கில் பட்டாபிராமா ராவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications