ராஜஸ்தான்: பல ஆண்களுடன் தொடர்பு- திருமணமான மகளின் தலையை துண்டித்த தந்தை
ஜெயப்பூர்: ராஜஸ்தானில் கணவரைப் பிரிந்த மகள் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்ததை பொறுக்க முடியாத தந்தை வாளை எடுத்து மகளின் தலையைத் துண்டித்துக் கொன்றார்.
ராஜஸ்தான் மாநிலம் ராஜாசமந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஒகாத். அவரது மகள் மஞ்சு(20). அவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் அவர் கணவருடன் வாழாமல் வந்துவிட்டார். அவர் தனது தந்தையுடன் துங்கர்ஜி கா குடா கிராமத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். கணவரைப் பிரிந்த மஞ்சுவுக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இதை தந்தை கண்டித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அவர் ஒரு ஆணுடன் இருக்கையில் சிக்கினார். இனியும் மகள் திருந்தவே மாட்டாள் என்ற முடிவுக்கு வந்த ஒகாத் நேற்று மாலை வீட்டில் இருந்த மஞ்சுவை வாளால் வெட்டிக் கொன்றார். இதில் மஞ்சுவின் தலையும், உடலும் தனித்தனியானது. பின்னர் மஞ்சுவின் தலையை ஒரு கையிலும், ரத்தம்படிந்த வாளை ஒரு கையிலும் எடுத்துக் தொண்டு கெல்வா காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஒகாதை கைது செய்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications