தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலூதீன் பதவிக்காலம் நீட்டிப்பு: ஜெயலலிதா உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீனின் பதவிக்காலத்தை முதல்வர் ஜெயலலிதா நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன். அவரது பதவிக் காலம் கடந்த மாதமே முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில் அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு மிகவும் முக்கியமானவராக இருந்தவர் ஜமாலுதீன். அவரது திறமையைப் பார்த்து அவர் மேலவை சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு ஜமாலுதீன் மாற்றப்படுவார் என்று தான் பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஜெயலலிதா சட்டசபையில் பேசும்போது அவர் மனம் அறிந்து பழைய குறிப்புகளை கொடுப்பது, முக்கிய பாயிண்ட்களை எடுத்துக் கொடுப்பது என ஜமாலுதீன் திறமையாக செயல்பட்டாராம்.

இதனால் முதல்வர் ஜெயலலிதா ஜமாலுதீனுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+