நைஜீரியாவில் 3 சர்ச்கள் மீது இஸ்லாமிய அமைப்பு தற்கொலைப்படை தாக்குதல்: 52 பேர் பலி
ஜாரியா: நைஜீரியாவில் உள்ள 3 கிறிஸ்தவ தேவாலயங்களில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 52 பேர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு போகோ ஹரம் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நைஜீரியாவின் ஜாரியா நகரில் உள்ள 2 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கடுனாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அடுத்தடுத்து நடந்த இந்த தாக்குதல்களில் 52 பேர் பலியாகினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் இந்த தாக்குதல்களுக்கு போகோ ஹரம் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
கிறிஸ்தவர்கள் மசூதிகளை சூறையாடி அவற்றுக்கு தீ வைத்ததற்கு பழிக்குப் பழி வாங்கவே தேவாலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்கள் நடந்த பிறகு கடுனாவில் இருந்த அபுஜா செல்லும் நெடுஞ்சாலையை கிறிஸ்தவ இளைஞர்கள் மறித்துக் கொண்டு அந்த வழியாக சென்ற கார்களில் இருந்த முஸ்லிம்களை வெளியே இழுத்துக் கொன்றதாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
போகோ ஹரம் இஸ்லாமியர்களுக்கு என்று தனி மாநிலம் கோரி தேவாலயங்கள், பொது இடங்களில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு தனி மாநிலம் வழங்கப்படாததால் அந்த அமைப்பு அரசியல் தலைவர்களையும் கொலை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications