கைவிலங்கிட்டு செக்ஸ்... கை மாட்டிக் கொண்டதால் 'ஃபயரை' அழைத்த பெண்!

Subscribe to Oneindia Tamil

Handcuff
நார்த்தாம்ப்டன்: இங்கிலாந்தில் ஒரு பெண் கை விலங்கிட்டுக் கொண்டு செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கை மாட்டிக் கொண்டு கழற்ற முடியாமல் போனதால் அவர் தீயணைப்புப் படையினரை வரவழைத்து கை விலங்கிலிருந்து மீள வேண்டியதாயிற்று.

இந்த திடீர் சம்பவத்தால் அப்பெண் பெரும் தர்மசங்கடத்துக்குள்ளாகி விட்டாராம்.

இங்கிலாந்தின் நார்த்தாம்படனில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தீயணைப்புப் படையினருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய ஒரு பெண் தான் பெட்ரூமில் கை விலங்குடன் ஏடாகூடமான நிலையில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும், தன்னை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து அங்கு விரைந்தனர் தீயணைப்புப் படையினர். அந்தப் பெண்ணின் கைகள் கட்டிலுடன் கைவிலங்குடன் பிணைக்கப்பட்டிருந்தன. இது போலீஸார் பயன்படுத்துவது போன்ற கைவிலங்கு என்றாலும், படுக்கை அறைகளில் தம்பதியர் பயன்படுத்தக் கூடிய ஜாலியான விளையாட்டு கைவிலங்காகும். ஆனால் இந்தப் பெண் அந்தக் கைவிலங்கை கட்டிலுடன் பிணைத்திருந்தபோது அதை கழற்ற முடியாமல் போய் விட்டது.

செக்ஸ் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டிருந்தபோதுதான் இந்த எசகுபிசகு நடந்து விட்டதாம். ஆனால் அவருடன் இருந்த ஆண் அப்போது அங்கு இல்லை என்று கூறப்படுகிறது.

கைவிலங்கை தீயணைப்புப் படையினர் கழற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. இதையடுத்து கட்டிங் மெஷினைக் கொண்டு வந்து கைவிலங்கை துண்டித்து அப்பெண்ணை மீட்டுள்ளனர்.

அந்தப் பெண்ணுக்கு 22 வயதாகும். அந்தப் பெண்ணுக்கு வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதால் போலீஸாரைக் கூப்பிடவில்லையாம்.

இதுகுறித்து பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், எங்களுக்கு காலையில்தான் விவரம் தெரிய வந்தது. சிரித்துக் கொண்டோம். வித்தியாசமாக எதையோ செய்ய வேண்டும் என்பதற்காக அந்தப் பெண்ணும், அவருடைய நண்பரும் இப்படிச் செய்திருப்பார்கள் போல, ஆனால் விளையாட்டு வினையாகி விட்டது. அந்தப் பெண் தற்போது வெட்கப்பட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருக்கிறார் போல, இன்னும் அவரை வெளியில் காணோம் என்றார்.

செக்ஸ் விளையாட்டுக்களில் இநத் கைவிலங்கும் ஒன்று.. அதாவது பூவிலங்கு போல. மேற்கத்திய நாடுகளில் இதுபோன்று கைவிலங்கிட்டுக் கொண்டு கசமுசா செய்வது என்பது ஜாலியான ஒரு விஷயம். ஆனால் இந்த ஜோடிக்குத்தான் அது பெரிய தலைவலியாகிப் போய் விட்டது.

பார்த்து 'விளையாடுங்கப்பா'...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+