பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயலும் கேரள அரசைக் கண்டித்து 25ல் கோவையில் போராட்டம்: வைகோ
சென்னை: பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி செய்யும் கேரள அரசை கண்டித்து கோவையில் வரும் 25ம் தேதி அனைத்து கட்சி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பவானி ஆற்றின் குறுக்கே முக்காலி என்ற இடத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 டி.எம்.சி. தண்ணீரை திருப்ப கேரள அரசு முயற்சி செய்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.
இப்போது 6 டி.எம்.சி. தண்ணீரை தடுக்க கேரள அரசு நினைக்கிறது. இதனால் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். விவசாயம் தண்ணீர் இன்றி அழிந்து போகும். குடிநீருக்கும் ஆபத்து வரும்.
எனவே, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தக் கோரி வரும் 25ம் தேதி கோவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதில் விவசாயிகள், பொது மக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றிபெற செய்யுமாறு அழைக்கின்றேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications