மதுரை, விருதுநகரில் வீட்டு வேலை செய்வது போல் நடித்து 293 பவுன் நகை திருடிய பலே சரோஜா!
சிவகாசி: மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக வீடுகளில் வேலைக்கு சேருவது போல் நடித்து 293 பவுன் நகைகளை கொள்ளையடித்த பெண் பிடிபட்டுள்ளார்.
சிவகாசி காமாக் நகரில் வசித்து வரும் ஜனகராஜ் என்பவரின் வீட்டில் வேலை செய்த சரோஜா என்ற பெண் திடீரென்று காணவில்லை. வீட்டில் இருந்த 9 பவுன் நகையும், ஒரு வைர கம்மலும் மாயமானது. இதுகுறித்து சிவகாசி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சிவகாசியில் நகைக் கடை வைத்திருக்கும் தங்கராஜ் என்பவரிடம் நகைகளை சரோஜா விற்றுவிடு தலைமறைவானது தெரியவந்தது. நீண்ட தேடுதலுக்குப் பிறகு சரோஜாவும் அவருக்கு உதவிய செல்வராஜ் என்பவரும் சிக்கினர்.
இருவரிடமும் நடத்திய விசாரணையில் மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருமங்கலம், ஒத்தக்கடை, கருப்பாயூரணி, எஸ்.எஸ்.காலனி ஆகிய இடங்களில் வீடுகளில் வேலைக்கு சேர்ந்து 293 பவுன் நகைகளை திருடியதை சரோஜா ஒப்புக் கொண்டார். இந்த நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டன.












Click it and Unblock the Notifications