அரசியல் எரிச்சலால் எங்கள் மீது குண்டாஸை ஏவுகிறது அதிமுக அரசு- கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

திமுக செயற்குழுக் கூட்டம் இன்று அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் காலை முதல் மாலை வரை நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
அப்போது கருணாநிதி திமுக செயற்குழு தீர்மானம் குறித்து விவரித்தார். பின்னர் அவர் கூறுகையில், அதிமுக அரசு எத்தனை பொய் வழக்குகளைப் போட்டாலும் அவற்றை சட்டப்படியாக சந்திப்போம்.
எங்கள் மீது அவர்கள் அரசியல் எரிச்சலுடன் உள்ளனர். இதனால்தான் கழக முன்னணியினர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தை பிரயோகிக்கிறார்கள்.
அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் மத்திய அரசிடம் கோர மாட்டோம். மாநில அரசை டிஸ்மிஸ் செய்வதில் எங்களுக்கு உடன்பாடில்லை. அந்தக் கொள்கையில் மாற்றம் இல்லை என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications