மீண்டும் துணை ஜனாதிபதியாகிறார் ஹமீத் அன்சாரி!

ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும், ஆகஸ்டு மாதம் துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் அட்ட வணையை விரைவில் வெளியிட தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது.
ஜனாதிபதி பதவிக்கு உயர் வகுப்பை சேர்ந்த பிரணாப் முகர்ஜி தேர்வு பெறுவது உறுதியாகி விட்டதால் துணை ஜனாதிபதி பதவிக்கு கிறிஸ்தவர் அல்லது முஸ்லிமை தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்றுதான் சோனியா முதலில் விரும்பினார். அதில் மாற்றம் ஏற்பட்டு விட்டதால் ஹமீத் அன்சாரிக்கு துணை ஜனாதிபதி பதவியை 2-வது தடவை நீட்டித்துக் கொடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையே காங்கிரசில் உள்ள ஹமீத் அன்சாரி ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். துணை ஜனாதிபதி பதவி வகித்தவர்களில் ராதாகிருஷ்ணன் மட்டுமே 2-வது தடவை பதவி நீட்டிப்பு பெற்றார். எனவே அன்சாரி மீண்டும் துணை ஜனாதிபதி ஆக்கப்பட்டால் அது புதிய சாதனையாக இருக்கும்.
இந்த நிலையில் காங்கிரசில் உள்ள இஸ்லாமிய தலைவர்களான மோஷினா கித்வாய், ரகுமான்கான் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த சைபுதீன் சோஸ் ஆகிய 3 பேரின் பெயர்களும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகின்றன.
எதிர்க்கட்சிகள் சார்பில் நாகலாந்து முன்னாள் முதல்வர் எஸ்.சி. ஜமீர், அகாலி தளம் தலைவர் பாதல், பா.ஜ.க. மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications