டெல்லி, மும்பை மீது யாராவது 'கை' வைத்தால் 'மிஸ்ஸைல்' வந்து தாக்கும்!

இதுதொடர்பான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அது அனுப்பப்படவுள்ளது.
இந்த இரு நகரங்களிலும் பாதுகாப்புக்காக ஏவுகணைகளை நிறுத்தும் திட்டம் ஏற்கனவே தயாரிப்பில் இருந்து வருகிறது. விரைவில் விரிவான திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அதன் பிறகு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அதைத் தொடர்ந்து இரு நகரங்களிலும் ஏவுகணைகள் நிறுத்தப்படும்.
இரு நகரங்களிலும் எங்கெங்கு ஏவுகணைகளை நிறுத்துவது, எதிரி ஏவுகணைகளை கண்டறியும் ரேடார்களைப் பொருத்துவது என்பது உள்ளிட்ட பிற விஷயங்கள் படிப்படியாக தீர்மானிக்கப்படும்.
முதலில் ஆறு வகையான ஏவுகணைகள் இந்த இரு நகரங்களிலும் நிறுத்தப்படும். இவை அனைத்தும் தானாகவே இயங்கும் வகையில், செயல்படுத்தப்படும். அதாவது எதிரி நாட்டு ஏவுகணைகள் ஊடுறுவுவதைக் கண்டுபிடித்து தானாக கிளம்பிச் சென்று அழிக்கும் திறனுடன் கூடியதாக இவை இருக்கும். இவற்றின் செயல்பாடுகளில் மனிதத் தலையீடு தேவைப்படாது. ஒருவேளை, ஏவுகணைகள் செல்வது தேவையில்லை என்று நினைத்தால் மட்டுமே அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஏற்பாடுகள் இருக்கும்.
இந்த இரு நகரங்களைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும் இந்த ஏவுகணை பாதுகாப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். டிஆர்டிஓவின் பல்வேறு சோதனைகளுக்குப் பின்னரே முக்கிய நகரங்களில் ஏவுகணைளை நிறுத்துவது என்ற முடிவுக்கு டிஆர்டிஓ வந்துள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் 2000 கிலோமீட்டருக்கு அப்பால் வரும் ஏவுகணைகளை துல்லியமாக கண்டுபிடித்து நமது ஏவுகணைகள் சென்று அவற்றை மறித்து்த் தாக்கி அழிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சோதனைகளை பிருத்வி ஏவுகணைகளைக் கொண்டு டிஆர்டிஓ ஏற்கனவே வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
எதிரி நாட்டு ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் வல்லமையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது என்பது நினைவிருக்கலாம். அதேபோல பல நாடுகளையும் சென்று தாக்கும் வகையிலான கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையையும் சமீபத்தில் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications