சோனியாவை வாட்டுவது என்னவென்று மன்மோகனுக்கு தெரியும்: முன்னாள் சிஐஏ அதிகாரி
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி என்ன வியாதிக்காக கடந்த ஆண்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்பது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் என்று முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரீடெல் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூயார்க்கில் உள்ள ஸ்லோன்-கெட்டரிங் மெமோரியல் கேன்சர் சென்டரில் அறுவை சிகிச்சை நடந்தது. அவருக்கு கர்ப்ப வாய் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கணையப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்ததாகவும் கூறப்பட்டது. அவருக்கு என்ன பிரச்சனை என்பதை ரகசியமாகவே வைத்துள்ளனர்.
இந்நிலையில் சோனியா காந்திக்கு என்ன பிரச்சனைக்காக அறுவை சிகிச்சை நடந்தது என்பது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும் என்று முன்னாள் சிஐஏ அதிகாரி புரூஸ் ரீடெல் என்பவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டெய்லி பீஸ்ட் என்ற இணையத்தளத்தில் கூறியிருப்பதாவது,
சோனியாவின் உடல்நலம் குறித்த மர்மம் இந்திய தலைவர்களை நிலைதடுமாற வைத்துள்ளது. சோனியா எதற்காக வெளிநாட்டில் சிகிச்சை பெற்றார் என்பது இன்னும் ரகசியமாகவே உள்ளது. ஆனால் இந்திய தலைவர்கள் பலருக்கு தெரியாத அந்த ரகசியம் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தெரியும். சோனியா புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாக ஊடகங்கள் கணித்து செய்தி வெளியிட்டன. ஆனால் அந்த செய்தி உறுதிபடுத்தப்படவில்லை.
சோனியா தனது மாமியார் இந்திரா காந்திக்கு நெருக்கமாக இருந்தவர். தற்போது அவர் தனது முன்மாதிரியான இந்திரா போன்று செயல்பட முயற்சிப்பதாக சிலர் தெரிவித்துள்ளனர். முதலில் அரசியலுக்கு வரத் தயங்கிய அவர் தற்போது அதிகாரமிக்க பெண்ணாக உள்ளார்.
சோனியா காந்தியின் எதிர்காலத்திட்டம் பற்றி எழும்புயுள்ள கேள்விகள் மற்றும் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடமாட்டார் என்ற செய்தி இந்தியாவை சற்றே தடுமாற வைத்துள்ளது. பொருளாதார சீர்திருத்தம் மற்றும் முதலீட்டு விதிமுறைகள் குறித்த சில முடிவுகள் தள்ளிப் போடப்பட்டன. பொருளாதாரம் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
இன்றைய உலகில் அதிகாரமிக்க பெண்மணி சோனியா தான். ஏன் உலக வரலாற்றிலேயே சோனியா தான் அதிகாரமிக்க பெண்மணி என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications