திருப்தியில்லை: ராஜபக்சேவின் விவசாய ஆலோசகர் திடீர் ராஜினாமா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்காரா விலகியுள்ளார்.
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சேவின் விவசாய ஆலோசகர் முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்காரா. அவர் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
குண்டசாலை விவசாயக் கல்லூரி மற்றும் சீதா எலிய கிழங்கு விவசாய மத்திய நிலையம் அமைந்துள்ள இடங்களில் உள்நாட்டு விமான நிலையங்களை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
விவசாயத் துறையை முன்னேற்ற அதிபர் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றார்.ஆனால் அவரது கொள்கையை செயல்படுத்துவதில் அதிகாரிகளுக்கு போதிய அக்கறை இல்லை. மேலும், அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. எனவே, விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து விலகுகின்றேன் என்றார்.












Click it and Unblock the Notifications