'சபாஷ் சலேம்'...அபு சலேமுக்கு பாராட்டுடன் ஜாமீனையும் வழங்கிய டெல்லி கோர்ட்!
டெல்லி: போர்ச்சுகல் நாட்டிலிருந்து நிபந்தனையுடன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் நிழல் உலக தாதா அபு சலேமுக்கு டெல்லி கோர்ட் ஒன்று, சிறையில் அவர் சிறந்த நன்னடத்தையுடன் திகழ்வதாக பாராட்டு தெரிவித்துள்ளது. மேலும், அவருக்கு கடத்திப் பணம் பறித்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனும் அளித்துள்ளது.
இருப்பினும் சலேம் மீது மேலும் 7 வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவரால் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
கடந்த 2002ம் ஆண்டு ஒருவரைக் கடத்தி வைத்து பணம் பறித்ததாக சலேம் மீது வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டை அணுகினார் சலேம். அந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினோத்யாதவ், சலேமுக்கு ரூ. 1 லட்சம் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகையிலான ஒரு நபர் ஜாமீன் உத்தரவாதத்தில் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
இருப்பினும் சலேம் மீது மேலும் ஏழு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர் தொடர்ந்து சிறையில்தான் இருக்க வேண்டும்.
நீதிபதி தனது உத்தரவின்போது சலேமைப் பாராட்டவும் செய்தார். அவர் கூறுகையில், இந்த வழக்கில் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டார் சலேம். இந்த வழக்கில் அவருக்குத் தண்டனை கொடுத்தாலும் கூட 7 வருடங்கள் கிடைக்கலாம்.
ஒரு வழக்கில் ஒரு குற்றவாளிக்கு அதிகபட்சமாக எத்தனை ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறதோ, அதில் பாதி ஆண்டுகளை அவர் சிறையில் கழித்து விட்டால் ஜாமீன் தரலாம் என்று சட்டம் கூறுகிறது. அதன் அடிப்படையில் சலேமுக்கு ஜாமீன் அளிக்கப்படுகிறது.
மேலும் சிறையில் நல்ல நன்னடத்தையுடன் சலேம் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது. குற்றம் சாட்டப்பட்ட சலேம் மீது இதுவரை எந்தவிதமான புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது என்றார்.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் அபு சலேம். பல காலமாக தலைமறைவாக இருந்து வந்த அவரை போர்ச்சுகல் நாட்டிலிருந்து சிபிஐ அதிகாரிகள்நாடு கடத்திக் கொண்டு வந்தனர். ஆனால் அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படக் கூடாது என்று போர்ச்சுகல் நாட்டு நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications