இப்போது பாமகவின் 'டர்ன்'...செயற்குழுவைப் புறக்கணித்தார் அன்புமணி!

Subscribe to Oneindia Tamil

Ramadoss and Anbumani Ramadoss
சென்னை: திமுக கூட்டிய செயற்குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.அழகிரியும், பொதுக்கூட்டத்தை மு.க.ஸ்டாலினும் புறக்கணிப்பு செய்ததைத் தொடர்ந்து இன்று நடந்த பாமகவின் செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி புறக்கணித்து விட்டார். அவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

திமுக, பாமக ஆகிய இரண்டிலுமே அடுத்த கட்டத் தலைவர் பதவி என்பது தற்போது தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களின் வாரிசுகளுக்குத்தான் போகப் போகிறது. இதில் பாமகவில் பெரிய அளவில் குழப்பம் இல்லை, ஆனால் திமுகவில்தான் மிகப் பெரிய அளவில் குழப்பம் கும்மாளமடித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் சென்னையில் நடந்த திமுக செயற்குழுக் கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. அதே போல அன்று மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், பாமகவின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் இக்கூட்டத்தில் முக்கியத் தலைவரும், டாக்டர் ராமதாஸின் வாரிசுமான அன்புமணி ராமதாஸ் பங்கேற்கவில்லை.

அவர் கூட்டத்தைப் புறக்கணித்ததாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் எதற்காகப் புறக்கணித்தார், என்ன கோபம் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+