இளம் ஜூடோ வீராங்கனையை பலாத்காரம் செய்த பயிற்சியாளருக்கு வலைவீச்சு!
அமிர்தசரஸ்: அமிர்தசரஸில் இளம் ஜூடோ வீராங்கனை ஒருவரை, பயிற்சியாளர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. குற்றச்சாட்டப்பட்ட பயிற்சியாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சுந்தர் நகர் என்ற இடத்தில் கடந்த 7ம் தேதி முதல் 3 வார ஜூடோ விளையாட்டிற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கலந்து கொண்டார். அப்போது ஜூடோ பயிற்சியாளர், அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த பள்ளி மாணவி, தேசிய அளவிலான ஜூடோ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த 9ம் தேதி ஜூடோ முகாமிற்கு அழைத்து செல்வதாக கூறி, மாணவியை வீட்டில் இருந்து பயிற்சியாளர் அழைத்து சென்றார்.
ஆனால் ஜூடோ முகாமிற்கு அழைத்து செல்லாமல், அமிர்தசரஸை அடுத்த சிஹிகர்தா என்ற இடத்தில் உள்ள பயிற்சியாளரின் வீட்டிற்கு மாணவியை அழைத்து சென்று, அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த நாள் கங்க்ரா என்ற இடத்திற்கு கூட்டி சென்று அங்கும் மாணவியை பலாத்காரம் செய்திருக்கிறார். அதன் பிறகு அந்த மாணவியை கடந்த 17ம் தேதி ஜூடோ முகாமிற்கு கொண்டு சென்று விட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கூறியதாவது,
சம்பவத்தன்று எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், ஜூடோ பயிற்சிக்கு செல்ல எனது பெற்றோர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் எங்கள் வீட்டிற்கு வந்த பயிற்சியாளர் எனது பெற்றோரிடம் பயிற்சிக்கு அனுப்புமாறு வருந்தி கேட்டு கொண்டார். இதனால் பயிற்சியாளருடன் நான் சென்றேன் என்றார்.
முகாமில் இருந்து வீடு திரும்பிய பள்ளி மாணவி நடந்த சம்பவங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் தலைமறைவாக உள்ள ஜூடோ பயிற்சியாளரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications